சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ7,500 உதவித்தொகை!

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ7,500 உதவித்தொகை!

தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் கவனத்தில் கொண்டு, நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், இந்தப் போக்கை மாற்றியமைக்க ஒரு லட்சியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

தரமான பயிற்சியை வழங்குவதோடு, மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராவதை ஊக்குவிப்பதற்காக நிதிஉதவி வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன் படி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராக விரும்பும் முனைப்புள்ள மாணவர்களுக்கு மாநில அரசால் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) அண்ணா பணியாளர் நிர்வாகக் கல்லூரியுடன் ஒருங்கிணைந்து சிவில் சர்வீசஸ் ஆர்வலர்கள் சிறந்த பயிற்சி வசதிகள் மற்றும் பொருட்களைப் பெற உதவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி, ஒவ்வொரு ஆண்டும், 1,000 விண்ணப்பதாரர்கள் ஸ்கிரீனிங் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் ஒவ்வொருவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 மற்றும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மொத்தமாக ரூ.25,000 வழங்கப்படும். இதற்காக, டி.என்.எஸ்.டி.சி.,க்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் 51.4% என்கிற மொத்த சேர்க்கை விகிதம் (GER) பெருமைப்படுத்துகிறது, இது தேசிய சராசரியான 27.1% ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும், ஆனால், அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வில் செயல்திறன் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

2021 ஆம் ஆண்டு தேர்வெழுதிய 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கல்வியாளர்களின் கூற்றுப்படி, 2014 ஆம் ஆண்டில், மாநிலத்தில் இருந்து 119 மாணவர்கள் யுபிஎஸ்சிக்கு தகுதி பெற்றனர், அதன் பின்னர் தகுதி பெறுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்தப் புதிய முயற்சி புதிதாக சிவில் சர்வீஸ் எழுதும் ஆர்வலர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு, உயர்கல்வித் துறைக்கு, 6,967 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு கிடைத்துள்ளது, இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 1,300 கோடி ரூபாய் அதிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com