#BREAKING: கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.! அமைச்சர் அறிவிப்பு.!

கர்நாடகா வனத்துறையால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தார் அமைச்சர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
Minister Ranjith Kumar
Updated on

தமிழக சட்டசபையில் துறை ரீதியான விவாதம் இன்று 2வது நாளாக தொடங்கியது. நேற்று போதைப்பொருள் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த மாணவர்கள் கொலை பற்றிய விவாதத்தை எதிர்க்கட்சிகள் பேசினர்.

இந்நிலையில் இன்று கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களுக்கு நீதி வேண்டி எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், தீர்மானத்தின் மீது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கடந்த வாரம் கால்நடைகளைத் தேடி கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்ற 3 தமிழர்களை, கர்நாடகா வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக கர்நாடகா அரசு அறிவித்தது.

ஏற்கனவே காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பிரச்சினை இருந்து வரும் சூழலில், இந்த கொலை சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசு வழங்கிய நிவாரணம் மிகவும் குறைவு எனவும் சுட்டுக் கொள்ளப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளன.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும், கர்நாடகா வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவுக்கு செக்.. ஈரான் - ஓமன் சீக்ரெட் பிளான்.! ஹார்மூஸ் ஜலசந்தியில் வெடிக்கும் புதிய போர்.!
ரூ.10 லட்சம் நிவாரணம்

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்த தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் ஹானூர் தாலுகாவில் உள்ள மரியமங்கலம் கிராமம், காவிரி வனவிலங்கு சரணாலய வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த வாரம் தமிழநாட்டைச் சேர்ந்த நான்கு பேர் கால்நடைகளைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றனர். ஆனால் இவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகவும் கர்நாடகா வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார் என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காட்டுக்குள் சென்ற தமிழர்கள் கால்நடைகளைத் தேடியே சென்றனர் என அவர்களின் குடும்பத்தினர் தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை என்கவுண்டர் என்றே கர்நாடகா அரசு தெரவிக்கிறது. ஆனால் தமிழக அரசு இதனை வன்மையாக கண்டிப்பதோடு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

நிவாரணம்
Tamilnadu - Karnataka
இதையும் படியுங்கள்:
தொடரும் ஏற்றம்: 1 சவரன் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதோ.!!
ரூ.10 லட்சம் நிவாரணம்

கர்நாடக வனத்துறை நடத்தூய துப்பாக்கிச் சூட்டில் லாசர்தொட்டியைச் சேர்ந்த குமார் (வயது 33), மரியமங்கலத்தை சேர்ந்த ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42) மற்றும் ஜகன்னாததொட்டியைச் சேர்ந்த அந்தோணிசாமி (வயது 50) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

மேலும் மரியமங்கலத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (வயது 48) என்பவர் காயமடைந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது தமிழக அரசு. இருப்பினும் இந்த சம்பவம் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com