ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 44 இடங்களில் அனுமதி! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

RSS
RSS

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் . இதில் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்துள்ளது.

இதற்ககு முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த அனுமதி கோரியிருந்த ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரிக்கைக்கு, `சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது' என காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணிக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதன் பிறகு நவம்பர் 2-ம் தேதி நடந்த விசாரணையில், பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை வைத்த 50 இடங்களில், 3 இடங்களில் மட்டுமே பேரணி நடத்தலாம் என அரசு அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் தரப்பு, வி.சி.க-வின் பேரணி எண்ணிக்கையைக் காரணம் காட்டி இதனை ஏற்கமறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு நவம்பர் 4 தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாட்டில் மொத்தம் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com