தமிழ்நாட்டில் ஐம்பது மாவட்டங்கள் எனக்கூறி அதிர்ச்சியளித்த ஆர்எஸ்எஸ்!

தமிழ்நாட்டில் ஐம்பது மாவட்டங்கள் எனக்கூறி அதிர்ச்சியளித்த ஆர்எஸ்எஸ்!
Published on

மிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாக சமீப காலங்களில் அந்த அமைப்பின் சார்பில் பெரிய குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இது சம்பந்தமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடுத்து இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது.

‘தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் நடைபெறும் பேரணிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்குமா?’ என்று அனைவராலும் எதிர்பார்த்திருந்த வேளையில், விசாரணையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழ்நாட்டில் ஐம்பது மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். இதைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கூடியிருந்த நீதிபதிகள் முதற்கொண்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான எதிர் தரப்பு வழக்கறிஞர், ‘தமிழ்நாட்டில் ஐம்பது மாவட்டங்களா? நான் கேள்விப்பட்டதே இல்லையே’ எனக் கூறி ஆச்சரியம் அடைந்துள்ளார். அதோடு, ‘முதலில் தமிழ்நாட்டில் ஐம்பது மாவட்டங்களே இல்லை. மேலும், பிரச்னைகள் உள்ள இடங்களில் மட்டுமே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், முழுமையாக இந்தப் பேரணிக்குத் தடை விதிக்கப்படவில்லை’ என்று பதில் கூறி உள்ளார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் இம்மாதம் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com