கிராமப்புற இளைஞர்களே தொழில் தொடங்க ரெடியா? 'இளம் கிராமமுனைவோர் திட்டம்' அறிமுகம்!

Startup
Startup
Published on

கிராமப்புற மக்களின் நல்வாழ்வுக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், கிராமங்களைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோருக்கு (Young Entrepreneurs) உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட் ஃபவுண்டேஷன் மற்றும் பாரதிய யுவசக்தி அறக்கட்டளை (BYST) இணைந்து நடத்தும் 'இளம் கிராமமுனைவோர் மேம்பாட்டுத் திட்டம்' (Young Grampreneur Development Programme) 2025 முதல் 2028 வரையிலான மூன்று ஆண்டுகளுக்குத் தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், குடும்ப வருமானத்தைப் பெருக்கவும் இந்தத் திட்டம் ஒரு பாலமாக அமையும்.

இத்திட்டத்தில் சுமார் 4,500 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆலோசனை (Counselling) மற்றும் வழிகாட்டுதலுக்கு உட்படுத்துவதால் அவர்கள் தொழில்முனைவு சார்ந்த அறிவை பெற உதவும். சுமார் 900 aspiring micro-entrepreneurs-க்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படும், இதில் தொழில்முனைவு தொடங்குவதற்கான அடிப்படைகள், திட்டமிடல், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன்கள் மேம்பட உதவும்.

தற்போது செயல்படும் UYEGP திட்டத்திற்கான பொது தகுதிகளாக (Tamil Nadu) வயது 18 முதல் 35 வருடங்கள் (சிறப்பு பிரிவுகளுக்கு அதிகபட்சம் 45 வரைக்கும்) ,கல்வி குறைந்தது 8-ஆம் வகுப்பு , குடும்ப ஆண்டு வருமானம் ₹5,00,000/- க்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலதனப் பங்களிப்பு:

  • பொதுப் பிரிவு: திட்ட மதிப்பீட்டில் 10% விண்ணப்பதாரர் பங்களிப்பு செய்ய வேண்டும்.

  • சிறப்புப் பிரிவு (SC/ST/BC/MBC/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்): 5% பங்களிப்பு போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் ஆதார், கைபேசி எண் மற்றும் பிற ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட MSME / DIC இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாவட்டத் தொழில் மையம் (DIC) விண்ணப்பத்தைச் சரிபார்த்துத் தேர்வு செய்த பிறகு, தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியில் (EDP Training) கலந்துகொள்வது கட்டாயம். பயிற்சிக்குப் பின் சான்றிதழைச் சமர்ப்பித்து வங்கி மூலம் கடன் மற்றும் மானியம் பெற்றுத் தொழிலைத் தொடங்கலாம்.

இத்திட்டத்தில் 40% இடங்கள் பெண்கள் மற்றும் SC/ST சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இது சமமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறந்த முயற்சியாகப் பாராட்டப்படுகிறது.கிராமப்புற இளைஞர்கள் மேலும் இத்திட்டம் குறித்து ஆன்லைன் மூலம் அறிந்து பயன்படுத்தி தொழில் முனைவோராக முன்னேறலாம்.

இதையும் படியுங்கள்:
2025 REWIND: அம்பானியா? அதானியா? 2025-ன் டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள்!
Startup

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com