500 நாட்கள் கழித்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்!

Russia-Ukraine war to end after 500 days?
Russia-Ukraine war to end after 500 days?
Published on

ஷ்யா - உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் ராணுவ வளங்கள் தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரஷ்யாவை எதிர்ப்பதற்காக 1949 ஆம் ஆண்டு நேட்டோ என்ற அமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. அதன் பின்னர் சோவியத் ரஷ்யா விழ்ந்த பின்னரும் இந்த அமைப்பு கலைக்கப்படாமல் இருந்தது மட்டுமின்றி, முன்னர் ரஷ்யாவில் ஒரு நாடாக இருந்த உக்கிரேனையை தன்வாசம் ஆக்கிக்கொண்டது. இதுதான் ரஷ்யா உக்ரின் மீது போர் தொடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது எனலாம். ஏனென்றால் என்ன தான் ரஷ்யா மிகப்பெரிய நாடாக இருந்தாலும் அந்நாட்டிற்கு போதுமான அளவு உணவு பொருட்களும், தானியங்களும் உக்ரைனிலிருந்து போகிறது. 

மேலும் உக்ரைன் ரஷ்யாவின் பக்கத்து நாடு என்பதால், அது நேட்டோ அமைப்பின் கீழ் வந்துவிட்டால், அமெரிக்காவின் படைகள் ரஷ்யாவுக்கு மிக அருகில் நிலை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரஷ்யாவும் அமெரிக்காவும் பரம எதிரிகளாக இருப்பதால், எப்படி அமெரிக்கர்களை பக்கத்து நாட்டிற்குள் நிற்க வைக்கலாம்? அதற்கு உக்ரைன் எப்படி இடம் கொடுக்கலாம்? என ரஷ்யா போர் தொடங்கிவிட்டது. 

உக்ரைனிடம் சொல்லும்படியாக அவ்வளவு ஆயுதமெல்லாம் கிடையாது. ஆனால் அமெரிக்கா இதுவரை 3.6 லட்சம் கோடி அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்திருக்கிறது. சொல்லப்போனால் மிகப்பெரிய நாடான இந்தியாவுக்கே 6.7 லட்சம் கோடி தான் செலவாகிறது. ஆனால் அதில் பாதியை சிறிய நாடான உக்ரைனுக்கே அமெரிக்கா செலவு செய்துள்ளது. எனவே தங்களின் எல்லையைப் பாதுகாக்க ரஷ்யா உக்ரேன் மீது 500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதில் இரு நாடுகளும் ஏராளமான இழப்பை சந்தித்துள்ளனர். 

இந்த போரால் 60 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். சுமார் 9000 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 15 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் படுகாயம் அடைந்தது மட்டுமின்றி, ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பை உக்ரேன் சந்தித்துள்ளது. இத்தகைய இழப்பை சந்தித்தும் நேட்டோ அமைப்பிலிருந்து விலகுவதாக உக்ரைன் அறிவிக்கவில்லை. இதனால் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்தவில்லை. 

இந்நிலையில்தான் உக்ரைனின் ராணுவ வளங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய அவர், "இதுவரை அமெரிக்க ஐரோப்பா போன்ற நாடுகளின் உதவி இருந்ததால் உக்ரைனை எங்களால் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது அந்நாட்டின் ராணுவ வளங்கள் கிட்டத்தட்ட காலியானதால், விரைவில் நாங்கள் வெல்வோம்" என்று கூறியுள்ளார். 

இதனால் நீண்ட காலமாக நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com