கிரிமியா பாலத்தில் கார் ஓட்டிச் சென்ற ரஷ்ய அதிபர் புடின்; வைரல் வீடியோ!

ரஷ்ய அதிபர் புடின்
ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்யா - உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியாவை 2014-ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதையடுத்து ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையே கிரிமிய கடலில் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 19 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல பாலம் அமைக்கப்பட்டது.

உக்ரைன்- ரஷ்யா போரை அடுத்து தென்பகுதியில் உள்ள ரஷ்ய படையினருக்கு தேவையான தளவாடங்களை அனுப்பும் முக்கிய வழித்தடமாக இது இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி இந்த பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதன் ஒரு பகுதியை தகர்த்தது. அதையடுத்து இந்தப் பாலத்தை சீரமைக்கும் பணியை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று இந்த பாலத்தின் மீது தனது மெர்சிடிஸ் காரை தானே ஓட்டிச் சென்று பார்வையிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவு வரும் நிலையில், அவர் கார் ஒட்டிச் சென்று கிரிமியா பாலத்தை வீடியோ வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com