ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில், வரும் டிசம்பர் 4, 5 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர்தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் உடனான போர் தொடங்கிய பிறகு, புதினின் முதல் இந்திய பயணம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக 2021 டிசம்பர் மாதம், அவர் இந்தியா வந்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.