பெண்களைப் பார்க்க பயந்து 55 வருடங்கள் தனிமையில் இருந்த முதியவர்.. எங்கு தெரியுமா?

Callitxe Nzamwita
Callitxe Nzamwita
Published on

பொதுவாக மனிதர்களுக்கு தன்னைவிட வயதில் மூத்தவர்கள் மேல், மேலிடத்தில் பணிபுரிவர்கள் மேல், தன் பெற்றோர்கள் மேல் உள்ள பயங்கள் எல்லாம் சகஜமானதுதான். ஆனால் 71 வயது முதியவர் ஒருவருக்கு பெண்களைப் பார்த்தாலே பயம் என்று 55 வருடங்களாக வெளியுலகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு வீட்டிலையே தனிமையில் வசித்துவருகிறார்.

ருவாண்டா நாட்டைச் சேர்ந்த கல்விட்க்ஸ் நிசம்விட்டே ( Callitxe Nzamwita) என்ற 71வயதான நபர் பெண்களைப் பார்க்க பயந்துக்கொண்டு 55 வருடங்களாக வீட்டிலையே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். அவர் தனது வீட்டை சுற்றி 15 அடி வேலி போட்டுக்கொண்டு யாரும் வீட்டிற்குள் நுழையாதப்படி வாழ்ந்து வருகிறார்.தற்போது இவர் குறித்த செய்தி சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

இவரை பற்றி அறிந்த உள்ளூர் செய்தி நிறுவனம் கல்விட்க்ஸ் நிசம்விட்டே பேட்டி எடுத்துள்ளனர். அப்போது அவர் கூறிய விஷயம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது. கல்விட்க்ஸ் நிசம்விட்டே சிறுவனாக இருந்தபோது பெண்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பாதிப்பு அவருக்கு வளர் இளம்பருவதில் பெண்களை பார்த்தாலே உடலை நடுங்க வைக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக வெளியே செல்வதை தவிர்த்த கல்விட்க்ஸ் நிசம்விட்டே தன் வீட்டை சுற்றி வேலி அமைத்துக்கொண்டு தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ”யாரையும் பார்க்காமல் தனிமையில் இருப்பதே தனக்கு பிடித்திருக்கிறது” என்றும் கூறினார்.

என்னத்தான் பெண்கள் வரக்கூடாது, பார்க்ககூடாது என்று கூறினாலும் இவருக்கு வெளியுலகிலிருந்து அனைத்து பொருட்களும் வாங்கி வந்து கொடுப்பது அவர் பக்கத்து வீட்டு பெண்தான். அந்த பெண் பொருட்களை வாங்கிவந்து அவரின் வீட்டின் முன்பு வைத்துவிடுவார். அந்த பெண் சென்ற சிறிது நேரத்தில் கல்விட்க்ஸ் அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றுவிடுவார்.

Callitxe Nzamwita House
Callitxe Nzamwita House

கல்விட்க்ஸ் வீட்டின் வழியாக ஒரு பெண் நடந்துசென்றால்கூட அவர் பயத்தில் வீட்டின் உட்புறத்திற்கே சென்றுவிடுவார். அப்படி பயப்படும்போது நெஞ்சு பதைப்பதைக்கும், வேர்வை அதிகமாக சுரக்கும், இறுக்கமான உணர்வு ஏற்படும். அவருக்கு வந்த அறிகுறிகளை வைத்து இவர் Gynophobia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர் .ஆனால் இவர் மருத்துவர்களை சோத்தித்து பார்ப்பதற்கு கூட அனுமதிப்பதில்லை. இந்த நோய் வந்தால் பெண்களை பார்க்கவே அச்சப்படுவார்களாம். கல்விட்க்ஸ் பொருத்தவரை அவர் சிறு வயதில் எதிர்க்கொண்ட பிரச்சனையால் பெண்கள் மேல் ஒருவகையான பயம் ஏற்பட்டிருக்கும். அந்த பயமே அவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்வதற்கான காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com