பாஜக இருக்கும் வரை அங்குல நிலத்தைக் கூட கைப்பற்ற முடியாது! உள்துறை அமைச்சர் அமித்ஷா!

அமித்ஷா
அமித்ஷா

இந்தியா, சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சினை என்பது அடிக்கடி இருந்து வருகிறது. தற்போது அருணாச்சல பிரதேசத்தில் தவாங் பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய உள்துறை அமச்சர் அமித்ஷா பாஜக அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் கைப்பற்ற முடியாது” என கூறியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்கவில்லை. இந்த செயலை கண்டிக்கிறேன் என கூறியுள்ளார்.

Rajnathsingh
Rajnathsingh

இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது. இதன் காரணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தவாங் எல்லை பகுதியில் நடந்த இந்திய சீன மோதல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமித்ஷா இன்று நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறது. நமது அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது. டிசம்பர் 8ம் தேதி மற்றும் 9ம் தேதி இடைப்பட்ட இரவில் அருணாச்சல பிரதேசத்தில் நமது இந்திய ராணுவ வீரர்கள் காட்டிய வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என கூறினார் அமித்ஷா.

மேலும் அவர் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (ஆர்ஜிஎஃப்) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டம் (எஃப்சிஆர்ஏ) உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்வி.அவர்கள் அனுமதித்திருந்தால், 2005-2007ல் சீனத் தூதரகத்தில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி மானியம் கிடைத்தது என்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருப்பேன். இது எஃப்சிஆர்ஏ-வின்படி ஏற்புடையதல்ல. எனவே விதிகளின்படி, உள்துறை அமைச்சகம் அதன் பதிவை ரத்து செய்தது என கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com