மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும், சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்த கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஷ்கர், யுவ புரஷ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார் விருதுக்காக தமிழ் மொழிக்காக எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதை நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு மொழிகளில் குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி யுவ புராஸ்கர் விருது இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது.
இந்நிலையில் சாகித்ய அகடமி விருதுகளுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் உதய சங்கர் மற்றும் ராம் தங்கம் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளன.