சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.ராஜேந்திரனின் 'காலா பாணி' !

சாகித்ய அகாடமி விருது பெற்ற மு.ராஜேந்திரனின் 'காலா பாணி' !
Published on

இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' என்ற தமிழ் நாவலுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டாக்டர் மு.ராஜேந்திரன், காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் டாக்டர் மு. ராஜேந்திரன் எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரி என பன்முக ஆளுமை கொண்டவர். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே வடகரை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். குடிமைப் பணி தேர்வில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்த போது, வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1998-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும், சில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் ‘காலா பாணி’ .

சாகித்ய அகாடமி விருது ஒவ்வொரு வருடமும் அனைத்து இந்திய மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு அளிக்கப் படுகிறது. அந்த வகையில் 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ் மொழி சார்பாக இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது, தமிழ் எழுத்தாளரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

1801-ம் ஆண்டு நடந்த காளையார் கோவில் போரைக் குறித்து எழுதப்பட்ட வரலாற்று நாவல் இது. இந்த சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகம் தெரியாத தீவில் இறக்கிவிடப்படும் ஒரு அரசனின் கதைதான் காலா பாணி. 200 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com