இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் வேலை - 323 காலிப்பணியிடங்கள்..!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்SOURCE: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
Published on

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) 26 விளையாட்டு பிரிவுகளில் உள்ள 323 உதவி பயிற்சியாளர் (Assistant Coaches) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடகளம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட 26 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனமொத்தமுள்ள 323 இடங்களில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைப்பின் பெயர் : இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)

துறையின் பெயர் : இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை

பதவியின் பெயர் : உதவிப் பயிற்சியாளர்

காலிப்பணியிடங்கள் : 323

இணையதளம் : https://sportsauthorityofindia.nic.in/

தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய பிரிவுகளில் தலா 28 இடங்களும், நீச்சலில் 26 இடங்களும், மல்யுத்தத்தில் 22 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர குத்துச்சண்டை (19), பளுதூக்குதல், வில்வித்தை, பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.

உதவிப் பயிற்சியாளர்கள் - 323 : இவை பொதுப்பிரிவு - 187, ஒபிசி - 73, எஸ்சி - 32, எஸ்டி - 9, பொதுப்பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 22 என நிரப்பப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை :

1. கணினி வழித் தேர்வு (CBT):

2. பயிற்சித் திறன் தேர்வு (CAT):

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 1:3 என்ற விகிதத்தில் (ஒரு இடத்திற்கு மூவர்) திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தது 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், துறை ஊழியர்களுக்கு தளர்வு உள்ளது.மேலும், இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த முறையில் உள்ளவர்களுக்கு 1 வருட தளர்வு பின்பற்றப்படுகிறது.

• கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் SAI NS-NIS,Patiala அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிற்சியாளர் பிரிவில் டிப்ளமோ (Diploma in Coaching) முடித்திருக்க வேண்டும்.

• சிறப்புத் தகுதி: ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். துரோணாச்சார்யா விருது பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதி உண்டு.

சம்பள விவரம்:

உதவிப் பயிற்சியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்கள் நிலை 6 கீழ் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் நியமிக்கப்படுவார்கள்.

தேர்வு முறை :

எழுத்துத்தேர்வு விளையாட்டு துறை சார்ந்த பொது அறிவு - 65 வினாக்கள், விளையாட்டு அறிவியல் - 25 வினாக்கள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு - 10 வினாக்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் நபக்ரலின் பயிற்சியாளருக்கான திறனை சோதிக்கும் அடிப்படையில் பயிற்சித் திறன் தேர்வு நடைபெறும். இதில் பெறும் மதிப்பெண்களில் 60 சதவீதமும், எழுத்துத் தேர்வில் 40 சதவீதமும் என எடுத்துகொள்ளப்படும்.

தேர்வு மையங்கள் :

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரம் அல்லது பெங்களூரு மையங்களில் தேர்வு எழுதலாம். இது தவிர டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் 15 வரை பெறப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.2,500 பெறப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு ரூ.2000 ஆகும்.

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் : 01.02.2026

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2026

இதையும் படியுங்கள்:
பொங்கல் பரிசு கொடுத்ததில் இப்படியொரு சிக்கலா? கதறும் வணிகர்கள்..!
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com