
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதான சாக்ஷி கொசோஹர் என்ற இளம் பெண் இந்தியாவில் முதல் முறையாக கமர்ஷியல் விமானங்கள் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று சாதனைப்படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம் நாட்டின் இளம் கமர்ஷியல் பைலட் என வரலாறு படைத்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பர்வானூ என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 18 வயதான சாக்ஷி கோச்சார். சிறுவயது முதலே படிப்பு மட்டுமல்லாது Extra curricular செயல்பாடுகளில் சாக்ஷி கோச்சாருக்கு ஆர்வம் அதிகம். எல்லா சிறுவர்களைப் போல் விமானங்கள் பறப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சாக்ஷி கோச்சார், தன்னுடைய 10 வயதில் தான் ஒரு விமானியாக வேண்டும் எனத் தீர்மானித்துள்ளார். இதற்காகக் கல்லூரி படிப்பை முடித்த பிறகுத் தனது வணிக விமானி உரிமம் (சிபிஎல்) பயிற்சிக்காக மும்பையின் ஸ்கைலைன் ஏவியேஷன் கிளப்பில் சேர முடிவெடுத்தார். அங்கு நான்கு மாதங்கள் அடிப்படை பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு, அடுத்த கட்ட பயிற்சிக்காக மும்பையின் ஸ்கைலைன் ஏவியேஷன் நிறுவனம் அவரை அமெரிக்காவுக்கு அனுப்பியது. அமெரிக்காவில் உள்ள ஏவியேஷன் கிளப்பில் மேம்பட்ட விமான பயிற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். தன் வாழ்நாளில் எப்போதும் பெற்றோர்களை பிரிந்திருந்த சாக்ஷி விமானியாக வேண்டும் என்ற கனவுக்காகப் பெற்றோரை விட்டு 8,500 கிலோ மீட்டர் பிரிந்திருந்தார்.
அமெரிக்காவில் ஏழரை மாதங்களை தன்னுடைய கமர்ஷில் விமான பயிற்சி நிறைவுச் செய்த தருணமும் சாக்ஷி கொசோஹர்வின் 18வது பிறந்தநாளும் ஒரே தினத்தில் அமைந்துள்ளது. இதுவரை வாழ்நாளில் எப்போதும் கிடைக்காத பிறந்தநாள் பரிசாக அமைந்தது. இந்நிலையில், இந்தியாவில் மிக இளம் வயதில் கமர்ஷில் பைல்ட் விமானங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற முதல் பெண் என்ற சாதனை முறியடித்துள்ளார் சாக்ஷி கொசோஹர்.
இந்த சாதனையின் மூலம் இதற்கு முன்பு 19 வயதில் கமர்ஷில் பைலட் விமானங்களை ஓட்டுவதற்காக உரிமம் பெற்ற விவசாயின் மகளான மைத்ரி பட்டேலின் சாதனையை தற்போது சாக்ஷி கொசோஹர் முறியடித்துள்ளார். இந்த இரு சாதனையாளர்களுக்கு விமான கேப்டன் டாக்டர் ஏ.டி.மனேக் என்பவர்தான் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.