தமிழ்நாடு அரசின் பிணையப் பத்திரங்கள் விற்பனை!

தமிழ்நாடு அரசின் பிணையப் பத்திரங்கள் விற்பனை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாடு அரசு பத்து ஆண்டுகால மற்றும் இருபது ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பது குறித்து, தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு மொத்தம் 4000 கோடி ரூபாய் மதிப்பில், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் ஜூலை 4ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. போட்டி ஏலக் கேட்புகள் அன்று 10,30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜுலை 4, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்’ என்று அந்த நிதித் துறை அறிவிப்பில் கோரப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com