தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 முழு கரும்பு சேர்த்து பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சரின் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதை அறிவோம். இதையொட்டி நாளை முதல் டோக்கன்கள் சேலத்தில் உள்ள பத்தரை லட்சம்குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதன்படிசேலம்மாவட்டத்தில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்திற்கு ரூபாய் 118 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 350 குடும்ப அட்டைதாரர் களுக்கும் கிராமப்புற பகுதிகளில் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மற்றும் நேரம் தொடர்பான டோக்கன்களை நாளை செவ்வாய்க்கிழமை முதல் எட்டாம் தேதி வரை குடும்ப அட்டைதார்களின் வீட்டிற்கு சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்படும்.
ஒன்பதாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை குடும்ப அட்டையாளர்களுக்கு வழங்கப் படும் பொங்கல் பரிசு டோக்கனில் தெரிவிக்கப் பட்டுள்ள விபரங்களின்படி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது ..என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் “பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப் படுவதற்காக விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும் வகையில் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அலுவலர் அளவிலான 20 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குழுக்களில் உள்ள அலுவலர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் தரம் உயரம் ஆகியவற்றை சரிபார்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய உள்ளனர். மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விவரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களை விவசாயிகள் நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
அரசு குறிப்பிட்டுள்ள முறைகளின்படி அவரவர் களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு மக்கள் சென்று முகக்கவசம் அணிதல் மற்றும் இடைவெளியைக் கடைப்பிடித்து பொங்கல் பரிசைப் பெற்று மகிழலாம்.