நவ 21ல் சேலம் புத்தகத் திருவிழா.. எழுத்தாளர்கள் மகிழ்ச்சி!

சேலம் புத்தக திருவிழா 2022
சேலம் புத்தக திருவிழா 2022

ந்த வருடத்திற்கான சேலம் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து பேசிய ஆட்சியர், " சேலம் புதிய பஸ் நிலையம் அருகே மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழா வருகிற நவம்பஙா 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் 250க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன் அறிவு சார்ந்த பல்வேறு காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்களின் புதிய படைப்புகளை புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

அந்த வகையில் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் வெளியிட தயாராக உள்ள தங்களது படைப்புகளை உடனடியாக மாவட்ட மைய நூலகத்தில் வழங்கி விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது உள்ளூர் படைப்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கண்காட்சியில் தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்றார்.

மேலும் ஒவ்வொரு படைப்பாளரும் தமது நூல்களில் 25 பிரதிகளை மாவட்ட மைய நூலகத்தில் ஒப்படைத்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும் விழாவின் நிறைவில் விற்பனையான நூல்கள் போக மீதமுள்ள நூல்கள் மீண்டும் முறையாக நூலக அலுவலர் மூலமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும்    அறிவிக்கப்பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com