அடிபணிந்த OpenAI.. மீண்டும் சிஇஓவான சாம் ஆல்ட்மேன்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்!

Sam Altman is CEO again!
Sam Altman is CEO again!

OpenAI நிறுவனத்தின் CEO-ஆக சாம் ஆல்ட்மேனே மீண்டும் தொடர்வார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

கடந்த சனிக்கிழமையன்று பிரபல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான OpenAI-ன் CEO பொறுப்பிலிருந்து, சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த முடிவை எடுத்த நிர்வாக இயக்குனர்கள் குழு, அவரிடம் வெளிப்படத்தன்மை இல்லை என தெரிவித்தது.

மேலும் அவர் தகவல் தொடர்பில் நிலையாக இல்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. எனவே அவர் மீது கொண்ட நம்பிக்கையை நிர்வாகம் இழந்துவிட்டதால் அவரை தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. இவர் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் OpenAI-ன் இணை நிறுவனரான கிரேக் பிராக்மேனும் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.

பின்னர் அந்நிறுவனத்திற்கு இடைக்கால சிஇஓ-வாக மீரா முராட்டி என்பவர் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சாம் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏஐ ஆராய்ச்சி குழுவை வழிநடத்துவார்கள் என சத்திய நாதெல்லா தனது X தளத்தில் பதிவு ஒன்றைப் போட்டார்.

ஆனால் சாம் ஆல்ட்மேன் OpenAI நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறுவனத்தில் பணி புரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அந்த முடிவை எடுத்த இயக்குனர் குழு விலகவில்லை என்றால், தாங்கள் அனைவருமே வேலையை ராஜினாமா செய்வோம் எனக்கூறி அதிர்ச்சி கிளப்பினர். 

எனவே அவர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்த OpenAI நிறுவனம், அவரை மீண்டும் சிஇஓ-வாக நியமிப்பதற்கான புதிய உடன்பாடு ஒன்றைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்காக சாம் ஆல்ட்மேனை பதவியை விட்டு நீக்கிய இயக்குனர் குழு மொத்தமாக கலைக்கப்பட்டு புதிய மூன்று பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் OpenAI நிறுவனம் அறிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com