சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

முலாயம் சிங் யாதவ்
முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றால் (UTI) பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங்கின் உடல்நிலை நலிவடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதி.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ்

மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக சிக்கல்கள் மோசமடைந்ததையடுத்து, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு(ஐ.சி.யு) மாற்றப்பட்டார். முலாயம் சிங் தற்போதைக்கு ஐ.சி.யு-வில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது மகன் அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com