சின்ன வெங்காயமில்லாத சாம்பாரா? பொதுமக்கள் முணுமுணுப்பு!

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

கோயம்பேட்டில் சின்ன வெங்காயவரத்து குறைந்து போனதால் வியாபாரிகள் சின்ன வெங்காய விலையை ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சின்ன வெங்காயவிலை "கிடு கிடு"வென உயர்ந்துள்ளது. இது கடந்த வாரத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.

இது தற்போது முதல் தரம் 120 ரூபாய்க்கும் இரண்டாம் தரம் 90 ரூபாய்க்கும் மூன்றாம் தரம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . பண்டிகை நாட்கள் வரும் நிலையினில் மேலும் வெங்காய விலை உயரலாம் என்று பொதுமக்கள் அச்சம் கொள்கிறார்கள்.

தற்போது மழை பெய்து வருவதால் சின்னமனுர், ஒட்டன் சத்திரம், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் சின்ன வெங்காய வரத்து மிகவும் குறைந்துள்ளது. பெரும்பாலான வெங்காய வார்த்து இந்த ஊர்களில் இருந்து கிடைப்பதே என்கின்றனர் வியாபாரிகள்.

இதன் காரணமாக சின்ன வெங்காய விலை மேலும் அதிகரிக்கலாம் என்கின்றனர். ஏற்கனவே விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வெங்காய விலையுமா? என கவலை தெரிவிக்கின்றனர். இல்லத்தரசிகள் தீபாவளிக்கு சின்ன வெங்காய இல்லாத சாம்பாரா? என முணுமுணுக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com