தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை... உச்சநீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

ன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருமணம் என்பது அடிப்படை உரிமை இல்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தன்பாலின திருமணத்தின் அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான இறுதி வாதங்களை இன்று உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி மற்றும் பி.எஸ் நரசிம்மா உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது.

அத்தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

1. முதலாவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் , ”திருமணம் என்பது நிலையானது” என்று கூறிய மத்திய அரசு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்,” திருமணம் ஒன்றும் மாற்றமுடியாதது மற்றும் நிலையானது அல்ல , தன்பாலின உறவில் இருக்க முழு சுதந்திரமும் உரிமையும் உள்ளது” என்று கூறினார்.

2.நீதிபதி பட் ,”தன்பாலின திருமணத்திற்கு இதுவரை எந்த சட்டமும் இல்லை. சட்டத்தை இயக்குவது என்பது நாடாளுமன்றத்தின் வேலை . நாடாளுமன்றம் சட்டத்தை இயக்கினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். அதுவரை எங்களால் இல்லாத சட்டத்திற்கு தீர்ப்பு அளிக்கமுடியாது.”

3.நீதிபதி கவுல் கூறியதாவது, தன்பாலின திருமணத்தை அங்கீகரித்தால் திருமண சமுத்துவத்தை முன்னோக்கி கொண்டு செல்லலாம்” எனவும் கூறினார்.

இதுபோக அமர்வில் பெண் நீதிபதி ஹீமா கோலி தீர்ப்பு எதுவும் வழங்கவில்லை. அமர்வில் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில் மூன்று நீதிபதிகள் தன்பாலின சட்டத்தை அங்கீகரிப்பது நாடாளுமன்றத்தின் வேலை, சட்டமன்றங்களால் மட்டுமே இதற்கு தீர்ப்பளிக்க முடியும் என்று முடித்தனர்.

ஆகையால் 3:2 என்ற கணக்கில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தனர். ஆனால் தன்பாலின திருமணம் செய்பவர்களுக்கு எந்த பிரச்சனைகள் வராமலும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைச்சரவை தலைமையில் ஒரு குழு அமைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு வலியுறுத்தினார்.

முன்னதாக ,தன்பாலின திருமணம் என்பது ஒரு குற்றம் என கூறும் 377 ஐ சட்டத்தை உயர் நீதிமன்றம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com