சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடி விவாகரத்து!

சானியா மிர்சா - சோயிப் மாலிக்
சானியா மிர்சா - சோயிப் மாலிக்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் அவரது கணவரும்  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான  சோயிப் மாலிக்கும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சானியா மிர்சாவுக்கும் சோயிப் மாலிக்குக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரலில் ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. பின்னர் சானியா மிர்சாவை ‘பாகிஸ்தான் மருமகள்’ என்று அந்நாட்டினர் கொன்டாடினர். டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சிக்கு வசதியாக இந்த நட்சத்திர விளையாட்டு ஜோடி, துபாயில் செட்டிலானது.

இவர்களுக்கு ஆண் குழந்தை இருக்கிறது. திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், இந்த தம்பதியிடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

சானியாவின்  இன்ஸ்டாகிராம் கணக்கில் சமீபத்திய  பதிவுகள் சிலவற்றின் படி, அவர்களின் திருமண நிலை சிக்கலில் இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில், சானியா மிர்சா - சோயிப் மாலிக் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக பாகிஸ்தானில் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com