தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக சாந்திமலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீனாக இருந்த டாக்டர் ஷாந்தி மலர், மருத்துவக் கல்வி இயக்குநர் கேடரில் சிறப்புப் பணி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் நாராயணபாபு, 2022 அக்., 31ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக இருந்த சாந்திமலர், மருத்துவ கல்வி பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்து சிறப்பாக செயல் பட்டு வந்தார். இதையடுத்து மார்ச் 13 தேதியிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சுகாதார செயலாளர் பி செந்தில்குமார் கையெழுத்திட்டு இயக்குனராக நியமிக்க பட்டுள்ளார் சாந்திமலர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக இருந்த சாந்திமலர், மருத்துவ கல்வி பொறுப்பு இயக்குனராகவும் இரு பொறுப்புக்களையும் அவர் திறம்பட கவனித்து வந்தார். இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குனராக சாந்தி மலரை தற்போது தமிழக சுகாதாரத் துறை நியமித்துள்ளது.
அதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி பொறுப்பு முதல்வராக ஆயிஷா சாகீம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சாந்திமலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வராக இருந்த போது மருத்துவக் கல்லூரியில் ராகிங் கண்காணிப்பு குழு அமைத்து ஆய்வு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்யப்படுவதை தடுப்பதற்கு 24 மணி நேரமும் பேராசிரியர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது