சரும பிரச்னை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகரின் படம்: கேரளாவில் சர்ச்சை!

சரும பிரச்னை விளம்பரத்தில் ஹாலிவுட் நடிகரின் படம்: கேரளாவில் சர்ச்சை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

கேரளாவில் சரும நோய்களுக்கான சிகிச்சை குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்ட விள்மபரம் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் படத்தை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் வடக்கரா கூட்டுறவு மருத்துவமனை வெளியிட்டிருந்த விளம்பரப் பலகை ஒன்றில் சருமம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்ற வாசகங்களுடன் ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் படத்தையும் வெளியிட்டிருந்தது.

மேலும் அந்த விளம்பரப் பலகை வாசகங்களை நடிகர் மார்கன் ஃப்ரீமேன் கூறுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு தரப்பினரும் மருத்துவமனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த விளம்பர பலகை நீக்கப்பட்டு, தவறுக்கு மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை தெரிவித்ததாவது;

அந்த விள்ம்பரத்தை கேரளாவில் உள்ளூர் விள்ம்பர டிசைனர் ஒருவர் வடிவமைத்தார். தவறான புரிதல் காரணமாக அந்த வில்ம்பரத்தில் ஹாலிவுட் நடிகர் படம் இடம்பெற்றூ விட்டதர்கு வருந்துகிறோம்.

-இவ்வாறு அந்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com