சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்: தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றியா?

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தி.மு.க நிர்வாகிகள் குறிப்பாக அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு வந்தவர்கள் மீதான புகார்களை குறிவைத்து தமிழக பா.ஜ.கவினர் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒரு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். சமீபகாலமாக நெருக்கடி ஆளாகிவரும் தி.மு.க அமைச்சர்களுக்கு மத்தியில் இதுவொரு நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், ஜெயலலிதா அணியில் இருந்தார். அ.தி.மு.கவிலிருநது விலகி, தி.மு.கவில் இணைந்தவர் கலைஞரின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்திருக்கிறார். 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் மீது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.94.88 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் மீதும் அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் சண்முகம் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், சென்ற ஆண்டு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நேற்று வெளியான தீர்ப்பில் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அமைச்சரும் அவருடைய மனைவி ஆதிலட்சுமி, சண்முகமூர்த்தி ஆகிய 3 பே்ரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை இதே வழக்கில் மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்த செய்திகள் இல்லை. எனினும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக சாத்தூர் ராமச்சந்திரனுக்கும் தி.மு.கவுக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com