
செப்டம்பர் 22ல இருந்து ஹோட்டல், ரெஸ்டாரன்ட், விமான டிக்கெட் விலை எல்லாம் குறையப் போகுது. இனி வெளியில ஜாலியா சாப்பிடலாம், தங்கி ரெஸ்ட் எடுக்கலாம், விமானத்துல பறந்து ஊர் சுத்தலாம். ஏன்னா, இதுக்கெல்லாம் GST-யை அரசாங்கம் குறைச்சிருக்காங்க.
ஹோட்டலில் சாப்பிடுறவங்களுக்கு என்ன வித்தியாசம்?
வெளியே சாப்பிடப் போகும்போது, இதுவரை நீங்க கட்டிக்கிட்டிருந்த 12% முதல் 18% ஜிஎஸ்டி இனி இல்லை! இனி வெறும் 5% மட்டும்தான்.
அதாவது, குடும்பத்தோட வெளியில விருந்து சாப்பிட்டாலும் சரி, நண்பர்களுடன் கேஷுவலா டைனிங் போனாலும் சரி, செலவு கம்மியாதான் இருக்கும்.
இந்த விலைக் குறைப்பு, ஜிஎஸ்டி வரியால் வீழ்ச்சியடைந்த உணவகங்களுக்கு மீண்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
இனி உங்கள் சாப்பாடு பில்லில் பெரிய வரி இருக்காது; சிரிப்புதான் இருக்கும்!வருமானத்திற்குள் செலவு செய்யும் மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய நிம்மதி!
ஹோட்டல் கட்டணக் குறைப்பு நடுத்தர மக்களின் பெரிய கவலைகளைக் குறைக்கும். இனி பட்ஜெட் போட்டு டூர் போறவங்க பயப்படத் தேவையில்லை.
₹1,000க்குக் கீழ் ரூம்: ஒரு நாளைக்கு ₹1,000க்கும் குறைவாக உள்ள ரூம்களுக்கு GST முற்றிலும் இல்லை. அதாவது, கம்மியான செலவில் டிரிப் பிளான் பண்றவங்களுக்கு இது ஒரு பெரிய லாபம்.
₹1,000 முதல் ₹7,500 வரை ரூம்: இதுநாள் வரை 18% இருந்த வரி, இனி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், குடும்பத்துடன் டூர் போகும்போது, பெரிய அளவில் பணத்தைச் சேமிக்கலாம்.
ஆகமொத்தம், சிக்கனமாகச் செலவு செய்யும் குடும்பங்களுக்கு இந்த மாற்றம், பண்டிகை மற்றும் திருமணக் காலங்களில் பயணங்களை இன்னும் எளிதாகவும், செலவில்லாமலும் மாற்றும்.
சரியா சொன்னா, இனி எல்லாமே சீப்பாகும்! அதனால உங்க ஃபேமிலி கூட ஹாப்பியா டூர் பிளான் பண்ணுங்க. செலவு கம்மியா இருக்கும்!
இதுநாள் வரை உங்கள் பர்சைக் காலி செய்த ரெஸ்டாரன்ட் பில்கள், விமான டிக்கெட் விலை, ஹோட்டல் ரூம் வாடகை... இனி எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.
அதாவது, திருவிழா சீசன், கல்யாண வைபவம்னு செலவு செய்யப் போகும்போது, இனி உங்கள் பர்ஸை இளைச்சுப் போக வைத்த செலவுகள் கணிசமாகக் குறையப் போகுது. இந்த மாற்றம் செப்டம்பர் 22-லிருந்து அமலுக்கு வருது.
இனி தைரியமா வெளியில சாப்பிடலாம், குடும்பத்தோட ஊர் சுத்திப் பார்க்கலாம்! உங்கள் பர்சும் இனி கொஞ்சம் 'வெயிட்டா' இருக்கும்!
குட் நியூஸ்: ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிரடி முடிவால், எகானமி வகுப்பில் விமானப் பயணம் இனி மலிவு! இதுவரை 12% ஆக இருந்த ஜிஎஸ்டி, இனி வெறும் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் விமானத்தில் பயணம் செய்வது இன்னும் எளிதாகவும், செலவில்லாமலும் மாறியுள்ளது.
ஆடம்பரப் பியர்களுக்கு : ஆனால், ஆடம்பரப் பயணங்களை விரும்புபவர்களுக்கு மாற்றங்கள் இருக்கு ! முன்பு 12% ஆக இருந்த பிசினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி, இனி 18% ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த மாற்றம் பிசினஸ் க்ளாஸ் பயணத்தை சற்று அதிக செலவுடையதாக மாற்றும்.
வரி குறைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும், இனி கொண்டாட்டங்கள் களைகட்டும்!
ஜிஎஸ்டி குறைப்பு, வெறும் வரிச் சலுகை மட்டுமல்ல; இது உங்கள் குடும்பத்தின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வரும்.
பண்டிகைக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஜிஎஸ்டி சலுகைகள் மக்களின் மனதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதனால், குடும்பங்கள் இனி பயமின்றி வெளியே சென்று சாப்பிடலாம், பயணங்களை மேற்கொள்ளலாம், மற்றும் விடுமுறையைக் கொண்டாடலாம்.
குறிப்பாக, கொரோனா காலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு, இந்த ஜிஎஸ்டி குறைப்பு ஒரு புத்துயிராக அமையும். இந்தச் சலுகை மூலம் இந்தத் துறைகள் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில், இந்த ஜிஎஸ்டி குறைப்பு, உங்கள் பணப்பையை நிரப்புவதோடு, உங்கள் மனதையும் உற்சாகப்படுத்தும் ஒரு நல்ல செய்தி!