12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை?

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை?

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெறும். நீட் இளநிலை 2023 தேர்வு மே 7ம் தேதி மதியம் 2மணி முதல் மாலை 5.20மணி வரை நடைபெறும் என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி அன்று நீட் தேர்வுகள் நடைபெறுவதால், மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மே 5ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதாலும் இதனால் நீட் தேர்வுகளில் முழு அளவில் மனதை ஒருமுகப்படுத்தி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடைபெற்றது.

தற்போது 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போக காரணம் இதுதான் என்கிறது பள்ளிக்கல்வித்துறை தரப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com