#JUST IN : பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளி திறப்பு தள்ளி போகிறது..!

school holidays
school holidays
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு தற்போது தள்ளி வைத்துள்ளது. அதாவது, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com