நாளை பள்ளிகள் செயல்படும்!

நாளை பள்ளிகள் செயல்படும்!சென்னை : கடந்த வாரம் சென்னையை தாக்கிய மாண்டஸ் புயல் காரணமாக பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறைவிடப்பட்டது. அதை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது

ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், பலத்த காற்றோடு, கனமழை பெய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மற்றும் மழையால் பாதிக்கப்படக்கூடும் என அறியப்பட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை சனிக்கிழமை (17.12.2022) பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், நாளை பெரும்பாலான பகுதிகளிலும் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலம் நாளை பள்ளிகள் செயல்படுவது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி நாளை இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

"மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com