சிந்தியா தலைக்கனம் மிக்கவர், துரோகி என திட்டித் தீர்த்த பிரியங்கா காந்தி!

பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா
பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா

த்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஒரு நம்பிக்கைத் துரோகி, தலைக்கனம் பிடித்தவர் என்று திட்டித்தீர்த்தார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி,

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குவாலியர் பகுதியில் உள்ள தாடியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், பேசிய பிரியங்கா ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை கடுமையாக தாக்கிப் பேசினார்.

(காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மார்ச் 2020 ஆம் ஆண்டில் அக்கட்சியிலிருந்து விலகி ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வுக்கு தாவினார். இதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்த்து.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா உயரத்தில் குட்டையானவர். ஆனால், அதிக தலைக்கனம் பிடித்தவர். நான் கடந்த காலங்களில் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். தம்மை எப்போதும் மகாராஜா என்றே கூப்பிட வேண்டும் என்று விரும்பியதாக காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் என்னிடம் கூறியதுண்டு.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெயர் அவருக்கு இருந்தாலும், குவாலியர் மக்கள் முதுகில் குத்தியவர். காங்கிரஸ் ஆட்சிக்காகத்தான் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால், வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜ.க.வுக்கு ஓடிவிட்டார் என்றார் பிரியங்கா காந்தி.

பா.ஜ.க. தலைவர்களையும் அவர் விட்டுவைக்கவில்லை. கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுவதாக நீலிக்கண்ணீர்வடித்த பிரதமர் மோடி ஜி, மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போதும் அதையே குறிப்பிட்டு பேசினார். சல்மான்கான் நடித்த தேரா நாம் படத்தின் கதாபாத்திரத்தை கூறி அழுதார். “மேரா நாம்” என்ற படத்தின் பெயர், கதை மோடி ஜியை வைத்தே எடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது என்றார்.

முதல்வர் சிவராஜ் சிங் செளஹானும் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் அவர் அமிதாப் பச்சனையே மிஞ்சிவிடுவார். ஆனால், அவர் செய்யும் வேலைகள் நகைப்புக்குரியதாக இருக்கும் என்றார் பிரியங்கா.

மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவுக்கு சட்டம் ஓழுங்கை பற்றி கவலை இல்லை. எந்த படத்தில், எந்த ஹீரோயின் என்ன உடை அணிந்து வந்தார் என்பதுதான் அவரது கவலை என்று பிரியங்கா தெரிவித்தார். பதான் படத்தில் தீபிகா படுகோனே காவிநிற உடை உடுத்தி வந்ததை கடுமையாக மிஸ்ரா விமர்சித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

2018 தேர்தலில் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தில் 34 தொகுதிகளில் 26 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. சிந்தியாவும் அவருடன் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு தாவினர். இந்த 22 பேரில் 17 பேர் குவாலியர் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com