10-ம் வகுப்பு தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்..!!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.
10th Public Exam Results
10th public exam
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 8,70,646 பள்ளி மாணவர்களும், 26,196 தனித்தேர்வர்களும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.

இன்று வெளியான 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 96.47 சதவீதம் மாணவிகளும், 92,15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்வில் 5171 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 1931 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ் - 34 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 92 பேரும், கணிதம் பாடத்தில் 3194 பேரும், அறிவியல் பாடத்தில் 10476 பேரும், சமூக அறிவியலில் 3336 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் - 98.43% பேரும், ஆங்கிலம் 99,44% பேரும், கணிதம் - 97,36% பேரும், அறிவியல் - 98% பேரும், சமூக அறிவியல் - 97.93% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com