விமானத்தில் பெண் பயணியைக் கடித்த தேள்!

விமானத்தில் பெண் பயணியைக் கடித்த தேள்!

கடந்த மாதம் நாக்பூரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவரை தேள் கடித்து விட்டது. விமானப் பயண வரலாறுகளில் இது மிக அரிதான சம்பவம்.

விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்தப் பெண் பயணி உடனடியாக டாக்டர் ஒருவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற்று பின்னர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று விமான நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி எங்களது விமானம் AI 630 இல் பயணிகளை தேள் கடித்த மிகவும் அரிதான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளத

அதைத் தொடர்ந்து உரிய நெறிமுறையைப் பின்பற்றி நிர்வாகம் விமானத்தை முழுமையாக ஆய்வு செய்தது. பின்னர் ஒரு புகைபிடித்தல் செயல்முறை மூலமாக பெண் பயணியைக் கடித்த தேள் கண்டுபிடிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப் பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமான நிறுவனம், தனது உணவுத் துறை மற்றும் உலர் துப்புரவுத் துறையினரிடம் தங்களது விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு படுக்கை வசதிகளில் ஏதேனும் அசெளகரியம் இருக்கிறதா? படுக்கையில் மூட்டைப்பூச்சி அல்லது வேறு ஏதேனும் பூச்சிகளின் தொல்லை இருக்கிறதா எனக்கேட்டறிந்து தேவைப்பட்டால் விமானத்தின் வசதிகளைச் சர்பார்த்து ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.

வெளியில் இருந்து விமானத்துக்குள் வரக்கூடிய பொருட்கள் மூலம் விமானத்துக்குள் பூச்சிகள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், புகை மூலம் அவற்றை அகற்றும் செயல்முறையை வழக்கமாகப் பயன்படுத்துமாறு தங்களது அலுவலர்களிடம் விமானநிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது என ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதே போன்று விமானத்தில் ஊர்வன விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகள் இதற்கு முன்பும் அரங்கேறியுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில், கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com