அயோத்தியில் கடல் என திரண்ட ராம பக்தர்கள்

அயோத்தியில் கடல் என திரண்ட ராம பக்தர்கள்

யோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் திங்கள்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடந்து முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் தரிசனத்துக்காக  திறக்கப்பட்டது. ஆலயத்திற்கு கடல் அலையென பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர்.

அயோத்தி, திரேதா யுகத்துக்கு திரும்பியது போல் உள்ளது. அனைவரும் “பால ராமரை” ஒரே நாளில் தரிசிக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றார் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்.

ஜெய் ஸ்ரீ ராம் உள்பட பல்வேறு விதமான ராம கோஷங்களையும் பக்திப் பாடல்களையும் பாடியவாறு பக்தர் கூட்டம் அயோத்தியை முற்றுகையிட்டுள்ளது. நகர் முழுவதும் காவிக்கொடியுடன் பக்தர்கள் காணப்படுகின்றனர். ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அயோத்தியில் ஏற்பட்டுள்ள பக்தி எழுச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், "குழந்தை ராமரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். ராமர் வாழ்ந்த திரேதா யுகத்துக்கு அயோத்தி திரும்பியதைப் போல உள்ளது.

பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு அயோத்தி நகரமே தூய்மை அடைந்துள்ளது. திரேதா யுகத்தில் வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியபோது நகர மக்கள் அனை வரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். அதுபோன்ற ஒரு தருணத்தை இப்போது பார்க்க முடிகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், அனைவருக்குமே இன்று தரிசனம் கிடைக்காது. நாளைக்கும் இதேபோன்ற கூட்டம் இருக்கும். இன்னும் சில நாட்களுக்கு கூட்டம் அதிகமாத்தான் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இருளைப் பார்த்தால் பயப்படும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான தீர்வு! 
அயோத்தியில் கடல் என திரண்ட ராம பக்தர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் அயோத்தி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களோடு குறைந்தபட்சம் 4 பேரையாவது அழைத்து வருகிறார்கள். இதன் காரணமாகவே கூட்டம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொருவரும் அன்பாக பழக வேண்டும். இணக்கத்தோடு வாழ வேண்டும். நல்லெண்ணத்தோடு நாம் வாழ வேண்டும். பகவான் ராமரின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என தெரிவித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்தவும், கட்டுப்படுத்தவும் காவல்துறையினரோடு, அதிரடி காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com