தலைமைச் செயலகத்தில் நிருபர் பணித் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!

தலைமை செயலகம்
தலைமை செயலகம்
Published on

தமிழக தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இம்மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

-இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது: 

தமிழ்நாடு சட்டப்பேரவை  தலைமைச் செயலகப் பணிகளுக்கு ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான எழுத்துத் தேர்வு இம்மாதம் 21-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறவுள்ளது.

இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வுக் கூட நுழைவு சீட்டுகள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பிக்க எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com