Flipkart, Amazon நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆணையம்நோட்டீஸ்.

Flipkart, Amazon நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஆணையம்நோட்டீஸ்.
Published on

ஃப்ளிப்கார்ட் அமேசான் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் 'சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்' எனப்படும் கருவியை விற்பதை நிறுத்துமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

டாட்டா குழுமத்தின் முன்னாள் சேர்மன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்ததிலிருந்தே மத்திய அரசு கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு காரில் கட்டாயம் சீட் பெல்ட் அலாரம் வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சீட் பெல்ட் அலாரம் இருக்கும் கார்களிலும், சீட் பெல்ட் அணியாமலேயே அதை நிறுத்தும் கருவியானது ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் விற்பனையாகி வருகிறது. இதைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்கும்போது சீட் பெல்ட் அணியவில்லை யென்றால் வரும் அலாரத்தை நிறுத்த முடியும். இந்திய மோட்டார் வாகனச் சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். சீட் பெல்ட் அணியாமல் அதற்கு பதிலாக அலாரத்தை நிறுத்தும் கருவியை பயன்படுத்தி இயக்கும்போது, விபத்தில் சிக்கினால் பயணிப்பவர்கள் உயிரிழக்கக்கூடும். இதனால் அந்த சாதனத்தை இணையத்தில் விற்பனை செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. 

இப்படி சீட் பெல்ட் அணியாமல் அலாரத்தை நிறுத்தும் கருவியை பயன்படுத்தி வாகனம் விபத்தில் சிக்கினால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு காப்பீடு பணத்தை வழங்க மாட்டார்கள். இது விபத்தில் சிக்கியவர்களின் கவனக்குறைவால் நடந்ததால், இன்சூரன்ஸ் கோரிக்கை நிறுத்தி வைக்கப்படும். எனவே இந்த சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கருவியை விற்பனை செய்வதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவின் பேரில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமானது அமேசான், ஃபிளிப்கார்ட், மீசோ, ஸ்னாப்டீல் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு, காரின் சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கருவியை விற்பனை செய்ய தடை விதிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மத்திய அமைச்சகம் இந்த கருவிக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது தான். ஆனால் இ-காமர்ஸ் தளங்களில் தொடர்ந்து இப்படிப்பட்ட பொருட்களானது வேறு வடிவில் மார்க்கெட்டில் நுழையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com