மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் அமலில் உள்ளது: தமிழக அரசு தகவல்!

மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் அமலில் உள்ளது: தமிழக அரசு தகவல்!

சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரி, சி.குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.இளையபெருமாள், அரசு தரப்பில் ப்ளீடர் பி.முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில், "மூத்த குடிமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரத்தை சேகரித்து வைக்கவும், அவர்கள் ஏதாவது புகார் அளித்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அதனைத் தீர்த்து வைக்கவும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்து இருக்கிறார்.

மேலும், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டு இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com