இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவு!

இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவு!

மும்பை பங்குச்சந்தை இன்றுடன் சுமார் ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவுடன் முடிவடைந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 142 புள்ளிகள் அல்லது 0.24 சதவீதம் குறைந்து 59,463.93 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 45 புள்ளிகள் அல்லது 0.26 சதவீதம் குறைந்து 17,465.80 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இதோடு மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சரிவுடன் முடிந்தது.

உலக நாடுகளின் வட்டி விகித உயர்வுகள், பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் தொடர்ந்து நீடித்து வரும் கவலைகள் முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீடுகளை தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலை உலகம் முழுவதும் இருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவுடன் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது இதற்கு முக்கியமான காரணம் மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ள காரணத்தால் சந்தை வரும் கச்சா எண்ணெய் அளவு குறையும். இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர துவங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை பல நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் சர்வதேச சந்தையின் தாக்கம் மற்றும் சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய சந்தை பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்து வருகிறது. முக்கியமாக நிஃப்டி தனது முக்கிய சப்போர்ட் அளவான 17800 புள்ளிகளை இழந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் கணிசமாக உயர்ந்த வேளையிலும் இந்திய பங்குச்சந்தை ஆதாயங்களைக் கண்டாலும் உள்நாட்டு பங்குகள் சரிந்தன.

வர்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டில் ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் அதிகப்படியான உயர்வை எட்டியுள்ளது. இதேபோல் அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com