பங்குச்சந்தையில் 'பிளட் பாத்'..! சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் சரிவு; ₹16 லட்சம் கோடி அவுட்!

sensex
senseximage source:mint
Published on

ஈரான்-அமெரிக்கா இஸ்ரேல் போர் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மந்தமாகும் என்ற அச்சம் நிலவுவதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடுமையாகச் சரிந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் தாக்கமாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 2,300 புள்ளிகளையும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 700 புள்ளிகள் வரையும் சரிவைக் கண்டன.

எதனால் இந்த சரிவு?

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் அதிகரித்ததால் உலக சந்தைகளில் எழுந்த அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் “risk-off” மனநிலைக்கு செல்வதால் பாதுகாப்பான சொத்துகளுக்கு (gold, dollar) பணத்தை மாற்றுவதுடன் பங்குகளை விற்றும் வெளியேறுகிறார்கள். குறிப்பாக Foreign Institutional Investors (FII) இந்திய பங்குகளை அதிகமாக விற்றதால் சந்தை கீழே வந்துள்ளதாகவும் கடந்த நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ₹16.32 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போரின் முக்கிய விளைவாகக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற பயம் எழுந்துள்ளது. குறிப்பாக, உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) அருகே பதற்றம் அதிகரித்ததால், ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $100-லிருந்து $110-க்கு மேல் உயர்ந்தது. சில மதிப்பீடுகளின்படி இது $114 வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பதுடன், போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகளும் உயரும். இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் அழுத்தத்தைத் தரும்.

துறை ரீதியான தாக்கம்:

எண்ணெய் விலை உயர்வு காரணமாக ONGC, BPCL மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) போன்ற நிறுவனங்கள் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டாலும், ஐடி (IT), வங்கி மற்றும் உலோகம் (Metal) ஆகிய துறைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஈரான் – அமெரிக்கா மோதல் நீண்டால், அது இந்தியப் பொருளாதாரத்திலும் பங்குச்சந்தையிலும் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com