செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார்: ஆளுநர் மறுப்புக்கு அப்பாவு விளக்கம் !

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Published on

செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து, அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்யா பட்டது.

இந்த விவகாரம் குறித்து கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :- செந்தில் பாலாஜி முதல்வர் சொல்லியோ அல்லது அவராகவோ பதவி விலகலாம். இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உண்டு. கடந்த 2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின்போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர் என தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com