அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்!

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்!

மிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதல் விவரங்களைப் பெற வேண்டி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவருக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அமலாக்கத்துறை இப்படி இருமுறை அசோக்குக்கு சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

சம்மன் கொடுக்கப்பட்ட தினத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதுவரை அமலாக்கத்துறையினர் முன்பு அசோக் ஆஜராகவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், ‘தனக்குக் கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்று அசோக் தரப்பில் கேட்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அமலாக்கத்துறை ஒருவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜாகவில்லை என்றால், அவர் அதற்குரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அப்படித் தர இயலாதபட்சத்தில் அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com