செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை தகவல்!

செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை தகவல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது “ என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தினையடுத்து காவேரி மருத்துவமனையில் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ வார்டு (sky view ward) என்ற தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் அனஸ்தீசியா செலுத்தப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராம் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து மூன்று மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதனையடுத்து காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் “ செந்தில் பாலாஜியின் இதயத்திற்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் விதமாக தொடர்ந்து 4 மணி நேரமாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை நிறைவடைந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com