#BREAKING : சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை ..!

SERIAL ACTRESS
SERIAL ACTRESS Source:kumudham
Published on

குடும்ப பிரச்சனை காரணமாக பிரபல தொலைக்காட்சியின் சீரியல் நடிகை விபரீத முடிவு...சென்னையில் உள்ள வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்ட நடிகை ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.இவர் 'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் அந்த சீரியலில் அருணின் அம்மாவாக நடிக்கிறார்.

சென்னையை சேர்ந்தவர் நடிகை ராஜேஸ்வரி. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவர் கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது.இதன் விளைவாக டிசம்பர் 8ம் தேதி காலை நடிகை ராஜேஸ்வரி கணவருடன் கோபித்துக்கொண்டு, சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி, நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காக முதலில் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை ராஜேஸ்வரி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com