சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் இன்று விடுதலை!

சார்லஸ் சோப்ராஜ்
சார்லஸ் சோப்ராஜ்

உலகையே உலுக்கிய சீரியல் கில்லரான சார்லஸ் சோப்ராஜ் பல்லாண்டு காலமாக நேபாள நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவரை நேபாள உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1970-களில் சார்லஸ் சோப்ராஜ் நிகழ்த்திய தொடர் கொலைகள் உலகையே உலுக்கின. தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் பழகி, கொலை செய்து, அவர்களின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் மூலம் உலகம் முழுக்க சென்று பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டதாக சார்லஸ் சோப்ராஜின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சார்லஸ் சோப்ராஜ் நிகழ்த்திய கொலைகளில் 12 மட்டுமே நிரூபணமான நிலையில் இந்தியாவில் கைது செய்யப்பட்டான். தனது 52-வது வயதில் இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், 2004-ல் நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக சார்லஸ் சோப்ராஜ் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..

இந்நிலையில் சிறையில் சோப்ராஜூக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 78 வயதாகும் சார்லஸ் சீப்ராஜை, அவனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்யுமாறும் அடுத்த 15 நாட்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்பவும் நேபாள  உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து சார்லஸ் சோப்ராஜ் இன்று நேபாளத்தில் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com