ஐந்தாயிரம் ரூபாய் பெறுமான மளிகை சாமான் டோக்கனையும் செட்டில் செய்யுங்க...!

ஐந்தாயிரம் ரூபாய் பெறுமான மளிகை சாமான் டோக்கனையும் செட்டில் செய்யுங்க...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவில் பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று, டெபாசிட் இழந்த நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். ஆளுங்கட்சியினர் மக்களுக்கு 400 கோடியை வாரி இறைத்ததுதான் தன்னுடைய தோல்விக்கு காரணமாகிவிட்டது என்று விளக்கமளித்தார்.

முன்னதாக ஆளுங்கட்சிக்கு கோரிக்கை விடுத்த மேனகா, ஐந்தாயிரம் ரூபாய் மளிகை சாமான்களை தேர்தல் முடிந்த பின்னர் தருவதாக உறுதியளித்து டோக்கன் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆளுங்கட்சியினர் டோக்கன் கொடுத்திருப்பதால் பெண்கள் காத்திருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாயையும் செட்டில் செய்துவிட்டு தொகுதியிலிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொண்டார்.

'400 கோடி பணத்தை மக்களுக்கு கொடுத்து, வெற்றியை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அந்த 400 கோடியை முதலீடாக வைத்து எத்தனையோ நல்ல திட்டங்களை அமலுக்கு கொண்டு வந்து, நேர்மையாக செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கலாம். மக்களின் வறுமையை மூலதனமாக வைத்து, ஏமாற்றி வெற்றியை பெற்றிருக்கிறார்கள் என்றவர், பகுத்தறிவு பலவன் பிறந்த ஊரில், பணத்தை வாங்கிவிட்டு வாக்களிப்பதாக கற்பூரத்தில் சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். எலுமிச்சை பழத்தையும் மந்திரித்து வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்'

'பணத்தை கொடுத்து மக்களின் மனதை மாற்றிவிட்டார்கள். இனி களத்தில் நிற்கப்போவது நாங்கள்தான். தொகுதி முழுவதும் டோக்கனை விநியோகம் செய்திருக்கிறார்கள். இதுவரை கொடுத்த இருபதாயிரம் ரூபாய் டாஸ்மாக்கில் செலவாகிவிட்டது. கொடுத்த வாக்குறுதியின்படி 5000 ரூபாய் பெறுமானமுள்ள மளிகை சாமான்களையும் தருமாறு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். இடைத்தேர்தல் வெற்றிக்காக திமுகவுக்கு காங்கிரஸ் ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும். கூடவே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்கும் பாராட்டு விழா நடத்த வேண்டும்' என்றார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மேனகா நவநீதன் எவ்வளவு வாக்குகளைப் பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. எப்படியும் பத்து சதவீதம் முதல் பதினைந்து சதவீதம் வரையிலான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 சதவீத வாக்குகளையே வாங்க முடிந்திருக்கிறது. சென்ற தேர்தலை விட சில நூறு வாக்குகள் குறைந்து பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே மேனகா பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியினர் சமூகத்தையும் முதலியார் சமூகத்தையும் சீமான் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று இன்று பேசிய நாம் தமிழர் வேட்பாளர், தேர்தல் நாளன்று சிறப்பான ஏற்பாடுகளை செய்திருப்பதாக தேர்தல் ஆணையத்தை பாராட்டியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com