நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் ஏழு மாநில முதல்வர்கள்!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் ஏழு மாநில முதல்வர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக்கின் எட்டாவது ஆட்சிக் குழுக் கூட்டத்தைஏழு முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் பல பிரச்சனைகளில் முரண்படும் நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவிருக்கும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 20 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் இது தற்போது முதலாவதாக நிதி ஆயோக் நெருங்கி வருகிறது.

மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி, கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் எம்.கே.ஸ்டாலின், டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் மான், தெலுங்கானாவின் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் கர்நாடகாவின் சித்தராமையா ஆகியோர் நிதி  ஆயோக்கில்  பங்கேற்காத  7 முதல்வர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான ஆளும் குழுவில் அனைத்து முதல்வர்கள், லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உள்ளனர். டெல்லியின் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவதற்கான அவசரச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் நேருக்கு நேர் மோதலில் சிக்கியுள்ள கெஜ்ரிவால், கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை குற்றம் சாட்டி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக வெள்ளிக்கிழமை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மீதான மத்திய அரசின் பாகுபாடு குறித்து பகவந்த் மான் வருத்தமடைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங் கூறுகையில், "மத்திய அரசு ரூ.4,000 கோடி ஊரக வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளது, மண்டி வரியை நிறுத்தியது மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சில திட்டங்களை தாமதப்படுத்துவதும், மாற்றுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.”  அதனால் தான் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்பட்டது என்று கூறினார்.

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கூட்டத்தில் கலந்து கொள்வதாக முதலில் அறிவித்திருந்தாலும், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.

தெலுங்கானா முதலமைச்சரைப் பொறுத்தவரை, கூட்டுறவு கூட்டாட்சி கொள்கையை மத்திய அரசு புறக்கணித்து மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவது குறித்து அவர் வருத்தமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மு.க.ஸ்டாலினும் பினராயி விஜயனும் வேறு அலுவல்கள் காரணமாக வரமாட்டார்கள் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலின் அதிகாரப்பூர்வ பயணமாக தற்போது ஜப்பான் சென்றுள்ளார். கர்நாடக  முதல்வர் சித்தராமையாவைப் பொருத்தவரை சனிக்கிழமையன்று தனது விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ள உள்ளதால் நிதி ஆயோக்கில் இடம்பெறுவதற்கில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களைத் தவிர, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் நிதி ஆயோக்கில்  கலந்து கொள்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com