செக்ஸ் ஒரு 'அழகான விஷயம்': ஆவணப் படத்தில் போப் பிரான்சிஸ்!

செக்ஸ் ஒரு 'அழகான விஷயம்':  ஆவணப் படத்தில் போப் பிரான்சிஸ்!
Published on

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் செக்ஸ் குறித்து தனது கருத்துக்களை பாராட்டுதலாகப் பதிவு செய்தார் போப் பிரான்சிஸ். அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில்  "அது கடவுள் மனிதனுக்கு வழங்கிய அழகான விஷயங்களில் ஒன்று" என்று விவரித்தார்.

86 வயதான போப்பாண்டவர் டிஸ்னி ப்ளஸ் தயாரிப்பான "தி போப் ஆன்சர்ஸ்" என்ற ஆவணப் படத்தில் இந்தக் கருத்துத் தெரிவித்தார், இது கடந்த ஆண்டு ரோமில் 20 வயதே நிரம்பிய 10 பேருடன் அவர் நடத்திய சந்திப்பைப் படம்பிடித்து வெளியிடப்பட்டப் படம்.

நிகழ்வில் இருந்த 10 பேரும் சமகாலப் பிரச்சனைகளான எல்ஜிபிடி உரிமைகள், கருக்கலைப்பு, ஆபாச தொழில், செக்ஸ் மற்றும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ள நம்பிக்கை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போப் பிரான்சிஸ்ஸிடம்  தங்களது கேள்விகளை முன் வைத்தனர். அவர்களது வினாக்களுக்கு விடையளிக்கும் விதமாக போப் மேற்கண்ட விஷயங்களில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

அப்போது செக்ஸ் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் "செக்ஸ் என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விஷயங்களில் ஒன்றாகும்" என்று அவர் அந்த ஆவணப்படத்தில் கூறினார்.

"செக்ஸுவல் ரீதியாக உங்களை நீங்கள் வெளிப் படுத்துவது என்பது வளமான ஆரோக்யமான விஷயம். எனவே உண்மையான செக்ஸுவல் வெளிப்பாட்டிலிருந்து விலகும் எதுவும் உங்களை வளம் குன்றச் செய்து உங்கள் ஆரோக்யத்தையும் குறைக்கிறது” என்று அவர் சுயஇன்பத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.

"பைனரி அல்லாத நபர் (பாலின அடையாளங்களற்ற மனிதர்) என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்றும் பிரான்சிஸிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் வெகு உறுதியுடன் அளித்த பதிலில், LGBT மக்கள் கத்தோலிக்க திருச்சபையால் வரவேற்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் “எல்லா மனிதர்களும் கடவுளின் குழந்தைகளே!... கடவுள் யாரையும் நிராகரிப்பதில்லை, கடவுள் ஒரு தந்தை. மேலும் சர்ச்சில் இருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை,'' என்று அவர் கூறினார்.

கருக்கலைப்பு குறித்து கேள்விக்குப் பதிலளிக்கையில், கருவுற முடியாத பெண்களிடம் பாதிரியார்கள் "கருணையுடன்" இருக்க வேண்டும் என்று போப் பிரான்ஸிஸ் கூறினாலும் அந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

போப்பின் கருத்துக்கள் L'Osservatore Romano, அதிகாரப்பூர்வ வாடிகன் செய்தித்தாளில் வெளியிடப் பட்டது, அது இளைஞர்களுடனான அவரது இந்த  உரையாடலை "மனம் திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்" என்று விவரித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com