ஆடியோ உரிமையிலேயே சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்' !

ஆடியோ உரிமையிலேயே சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்' !
Published on

'ஜவான்' படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக ஆர்வலர்களிடத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் இப்படத்தில் ஆடியோ உரிமை குறித்த ஒப்பந்த விலை பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஷாருக்கானின் 'ஜவான்' பட இசை ஆடியோ உரிமை முப்பத்தியாறு கோடி ரூபாய்க்கு விற்பனையானது பாலிவூட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

'ஜவான்' படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இது வரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது.

இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள்செல்வன்' விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்றும், இதன் மூலம் திரையுலகில் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது என்றும் திரையுலக வணிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில், ''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது'' என குறிப்பிட்டிருக்கிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோரின் திறமையும், அட்லீ குமாரின் நேர்த்தியான இயக்கத்தையும் இணைத்து 'ஜவான்' அற்புதமான படைப்பாக தயாராகி இருக்கிறது. உணர்வுபூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com