வசூலில் பட்டையை கிளப்பும் ஷாருக்கின்  ‘பதான்’

வசூலில் பட்டையை கிளப்பும் ஷாருக்கின் ‘பதான்’

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள திரைப்படம் 'பதான்' திரைப்படம் ஜனவரி 25ம் தேதி படு பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது.

இதுவரை படம் அதாவது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 235 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

பதான் பட ட்ரெய்லர் வெளியான போதே தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்குமே வித்திட்டது. ட்விட்டரில் BoycottPathaan என்றெல்லாம் ஹேஷ்டேக்களும் பறந்தன.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. அத்தோடு 5 வருடங்களுக்கு பின்னர் ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது.

பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அத்தோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜீரோ படம் கடைசியாக 2018ம் ஆண்டு வெளியாகிஇருந்தது. அதன்பிறகு லால் சிங் சத்தா, ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா போன்றபடங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தற்போது வந்துள்ள படம் பதான்.

ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com