மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்கான "சக்தி" திட்டம் : முதலமைச்சர் சித்தராமையா துவக்கம்!

மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்கான "சக்தி" திட்டம் : முதலமைச்சர் சித்தராமையா துவக்கம்!

கர்நாடகத்தைப் பூர்வீகமாக கொண்ட பெண்கள் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய இயலும் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்கான "சக்தி" திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார்.

ஜூன் 11ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் கேஎஸ்ஆர்டிசி உட்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணம் செய்வது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், விதான் சவுதாவின் வெளியே நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் " சக்தி "திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்திற்கான அடையாள அட்டையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். கர்நாடக அரசாங்கம் கொண்டு வந்துள்ள சக்தி திட்டத்தில் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய இயலும். அதன்படி இலவசப் பேருந்து பயணம் செய்ய, பெண்கள் சக்தி கார்ட் என்ற அட்டையை பெற வேண்டும்.

பெங்களூரு : ஜூன் 11 முதல் செயல்படுத்தப்படும் சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் கேஎஸ்ஆர்டிசி உட்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசப் பயணம் செய்வது தொடர்பான அறிவிப்பை மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

பெண்கள் இலவசமாக பயணம் செய்ய விரும்பினால், 'சக்தி ஸ்மார்ட் கார்டு' வைத்திருப்பது கட்டாயம், சேவா சிந்து போர்டல் மூலம் விண்ணப்பித்து சக்தி ஸ்மார்ட் கார்டுகளைப் பெறலாம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே இந்த சக்தி அட்டை பெற முடியும். கர்நாடக மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பெங்களூரு மாநகர பேருந்துகளில் இலவச பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்.

கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கல்யாண கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகிய நான்கு மாநகராட்சிகளின் பேருந்துகளில் பெண்கள் மாநிலம் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com