என்னது... பெட்ரோலிய உற்பத்தியைக் குறைக்கணுமா? ஆவேச ஷெல் கேஸ் சவான்!

என்னது... பெட்ரோலிய உற்பத்தியைக் குறைக்கணுமா? ஆவேச ஷெல் கேஸ் சவான்!

பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியைக் குறைக்கும் முடிவு ஆபத்தானதும் பொறுப்பற்றதும் ஆகும் என்று உலகின் முன்னனி எரிபொருள் நிறுவன உரிமையாளர் சாடியுள்ளார்.

உலக அளவில் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவதை படிப்படியாகக் குறைக்கவேண்டும்; இப்படிச் செய்தால்தான் இந்த நூற்றாண்டின் கடைசிக்குள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி குறைக்கமுடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐநா சபை போன்ற அமைப்புகளால் இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றைச் செயல்பாட்டுக்கும் கொண்டுவந்தபடி இருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் காலக்கெடு விதித்து, பெட்ரோலிய எரிபொருட்களின் அளவைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இதன்படி ஐரோப்பிய ஒன்றிய முன்னாள் உறுப்பு நாடான பிரிட்டனும் சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கணிசமான அளவு கச்சா பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தியை நிறுத்தவும் பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, பிபிசிக்கு பேட்டியளித்துள்ள பன்னாட்டு நிறுவனமான ஷெல் எரிபொருள் கம்பெனியின் தலைமை அதிகாரி வாயல் சவன், இந்த முடிவை கடுமையாகச் சாடியுள்ளார்.

சீனாவில் பெட்ரோல் டீசலுக்கான தேவை அண்மையாக அதிகரித்து வருகிறது; ஐரோப்பாவில் வரும் குளிர்காலத்துக்கு அதிக தேவை உள்ளது; உற்பத்தியைக் குறைக்கும் முடிவைச் செயல்படுத்தினால், மீண்டும் நாட்டில் எரிபொருள் செலவு பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கிறார், சவன்.

ஐரோப்பா உட்பட்ட குளிர் பிரதேசங்களில் நிலவும் குறைந்த வெப்பநிலையில், குளிரைப் போக்கவும் சுடுநீர், வீட்டை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு கணிசமான மின்சாரம் அத்தியாவசியமானது. அந்த மின்சாரத்தை உற்பத்திசெய்ய எரிவாயு அவசியம். வாகனங்களை இயக்குவதற்கான பெட்ரோல், டீசலும் முக்கியமானது.

இந்த சூழலில் உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்புப் பிரச்னையைத் தவிர்க்கவும் குறைக்கவும், கார்பனை உமிழக்கூடிய செயல்பாடுகளுக்கு கடிவாளம் போட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் உலகின் முன்னணி எரிபொருள் நிறுவனமான ஷெல் பிரிட்டனில் தன்னுடைய உற்பத்தியை, 2030ஆம் ஆண்டுவரை இப்போதைய நிலையில் தொடரும் முடிவில் உள்ளது.

பருவநிலை விஞ்ஞானிகள் இதை தவறான முடிவு என விமர்சிக்கின்றனர்.

இந்த உலகத்தை மேலும் பாதிக்கக்கூடிய வகையில் பெட்ரோல், எரிவாயுவைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், பசுமை எரிபொருளுக்கான பாதையில் முன்னேற ஷெல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேம்பிட்ஞ் பல்கலைக்கழக விஞ்ஞானி எமிலி சுக்பர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியா குட்ரெசும் புதிய பெட்ரோலிய உற்பத்தி முதலீடுகள் பொருளாதார ரீதியாக உகந்ததும் இல்லை; அது மடத்தனமும்கூட என காட்டமாகக் கூறியிருக்கிறார்.

ஆனால், ஷெல் தலைமை அதிகாரி சவனோ, குடெர்சின் கருத்தை மரியாதையுடன் மறுப்பதாகக் கூறியுள்ளார்.

பெட்ரோல், எரிவாயு உற்பத்தியைக் குறைத்தால், எரிபொருள் செலவு கடுமையாக அதிகரிக்கும் என்றே பதில் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்தன. இதனால், ரஷ்யாவிலிருந்து கிடைத்துவந்த எரிபொருளுக்கு தட்டுப்பாடும் தொடர்ந்து விலையும் கடுமையாக அதிகரித்தது நினைவிருக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com